ஐயப்பனுக்கு ஐம்பொன் தகடு
ADDED :4354 days ago
குமாரபாளையம்: குமாரபாளையம் அடுத்த அம்மன் நகர், ஐயப்பன் கோவிலில், ஸ்வாமிகளின் உருவம் பதித்த ஐம்பொன் தகடுகள் பதிக்கும் பணி நடக்கிறது. கேரள மாநிலத்தில் உள்ள ஐயப்பன் கோவிலின் அறுபடை வீடுகளான, அச்சன்கோவில், ஆரியங்காவு, குளத்துப்புழா, சாஸ்தாகோட்டை, பந்தளம், ஹரிஹரன்சுதன் ஆகிய கோவில்களில் உள்ள ஸ்வாமிகள் போல், ஸ்வாமி சிலைகள் அமைக்கப்பட்டு, அம்மன் நகர் ஐயப்பன் கோவிலில் வழிபாடு நடத்தப்படுகிறது. அந்த ஸ்வாமி சிலைகளுக்கு, ஆறு ஐம்பொன் தகடுகள், 1.08 லட்சம் ரூபாய் மதிப்பில் பதிக்கப்படுகிறது. கோவில் குருசாமிகள் நாச்சிமுத்து, ஏழுமலை, பட்டாபி மற்றும் ஐயப்ப பக்தர்கள் உள்பட பலர் பங்கேற்றனர்.