சிவன் கோவிலில் விளக்கு பூஜை
ADDED :4354 days ago
லாலாப்பேட்டை: கார்த்திகை தீப திருநாளையொட்டி, லாலாப்பேட்டை செம்பொன்ஜோதீஸ்வரர் கோவிலில் விளக்கு பூஜை நடந்தது.பிரசித்தி பெற்ற செம்பொன்ஜோதீஸ்வரர் கோவிலில், நேற்று முன்தினம் காலை கார்த்திக்கை தீபநாளையொட்டி விஷேச பூஜைகள் நடந்தது. தொடர்ந்து மாலை 6 மணிக்கு கோவில் வளாகத்தில் 7,008 விளக்குகள் அமைக்கப்பட்டது. பிறகு, மஹா தீபாரானைக்கு பிறகு பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், லாலாப் பேட்டை, பிள்ளாப்பாளையம், கருப்பத்தூர், புணவாசிப்பட்டி, சிந்தலவாடி, மகிழி பட்டி ஆகிய பகுதி களை சேர்ந்த மக்கள் பங்கேற்றனர். ஏற்பாடுகளை கோவில் நிர்வாக அலுவலர் கிருஷ்ணமாச்சாரி செய்திருந்தார்.