உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / நாமக்கல் பகுதியில் தீபதிருநாள் கோவில்களில் தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு

நாமக்கல் பகுதியில் தீபதிருநாள் கோவில்களில் தீபம் ஏற்றி சிறப்பு வழிபாடு

பரமத்திவேலூர் தாலுகாவில் நேற்று முன்தினம் இரவு கார்த்திகை தீப பண்டிகையை முன்னிட்டு கோவில்களில் சிறப்பு வழிபாடுகள் நடந்தது. விழாவையொட்டி பரமத்தி வேலூர் புதுமாரியம்மன் கோவிலில் மாலை தீபம் ஏற்றும் நிகழ்ச்சி நடந்தது. அதைத் தொடர்ந்து அம்மன் சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சி அளித்தார். விழாவில் பரமத்தி வேலூர் மற்றும் சுற்று வட்டார பகுதியை சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து கொண்டு வழிபாடு செய்து சென்றனர். இதேபோல் பஞ்சமுக விநாயகர் கோவில், பாண்ட மங்கலம் பிரசன்ன வெங்கட்ரமண பெருமாள் கோவில், பழைய காசி விஸ்வநாதர் கோவில், பச்சை மலை முருகன் கோவில், கபிலர்மலை முருகன் கோவில் உள்ளிட்ட பல்வேறு கோவில்களில் கார்த்திகை விழாவை முன்னிட்டு சிறப்பு தீபங்கள் ஏற்றப்பட்டும், படிகட்டு களில் தீபங்கள் ஏற்றியும் வழிபாடு நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !