உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / காளத்திநாதர் சாமி கோவிலில் விளக்கு பூஜை விழா

காளத்திநாதர் சாமி கோவிலில் விளக்கு பூஜை விழா

வேலூர்: பனப்பாக்கத்தில் உள்ளது ஞானாம்பிகை உடனுறை காளத்திநாதர் சாமி கோவிலில் உள்ள அய்யப்பசாமி கோவிலில் கார்த்திகை மாதம் பிறந்ததையொட்டி 1008 விளக்கு பூஜை விழா நடைபெற்றது. விழாவையொட்டி காலை 10 மணிக்கு அய்யப்பசாமிக்கு நெய் அபிஷேகமும், சிறப்பு அலங்காரமும் செய்யப்பட்டு தீபாராதனை நடைபெற்றது. மாலை 6 மணிக்கு 1008 விளக்கு பூஜை விழா நடைபெற்றது. இதில் திரளான பெண்கள் மற்றும் அய்யப்ப பக்தர்கள் கலந்து கொண்டு ஜோதியின் வடிவமான அய்யப்பனுக்கு 1008 அகல் விளக்கு ஏற்றி வழிபட்டனர். இரவு 8 மணிக்கு பல வண்ண வாணவேடிக்கைகளுடன் யானை வாகனத்தில் அய்யப்பசாமி வீதி உலா நடைபெற்றது. இரவு 10 மணிக்கு ஜோதி தரிசனம் நிகழ்ச்சி நடைபெற்றது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !