செஞ்சி மகாதேவிமங்கலம் ஐயப்பன் கோயில் 18 பொன் படிகள் பிரதிஷ்டை
ADDED :4425 days ago
செஞ்சியை அடுத்த மகாதேவிமங்கலம் கூட்டுச்சாலையில் அமைந்துள்ள ஐயப்பன் கோயிலில் புதிய 18 பொன் படிகள் அமைக்கப்பட்டு ஞாயிறுக்கிழமை பிரதிஷ்டை செய்யப்பட்டது. கார்த்திகை மாத பிறப்பை முன்னிட்டு மகாதேவிமங்கலம் கருணாசாயி ஆலயத்தில் அமைந்துள்ள சுவாமி ஐயப்பனுக்கு அதிகாலையில் கணபதி ஹோமம் மற்றும் சிறப்பு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. தொடர்ந்து புதிய படிகள் பிரதிஷ்டை செய்யப்பட்டு பூஜைகள் நடைபெற்றன. பொன் படிகளை செஞ்சி பேரூராட்சி கவுன்சிலர் அனுசுயா இராமானுஜம் வழங்கினார். இதனைத் தொடர்ந்து சிறப்பு அலங்காரத்தில் ஐயப்பன் பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.