உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கருவடிக்குப்பத்தில் சுவாமி சிலைகள் சேதம்

கருவடிக்குப்பத்தில் சுவாமி சிலைகள் சேதம்

புதுச்சேரி: கருவடிக்குப்பத்தில், கோவிலில் சுவாமி சிலைகள் சேதப்படுத்தப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சாமிப்பிள்ளைத்தோட்டத்தில், கருவடிக்குப்பம் செல்லும் நான்கு முனை சந்திப்பில், பழமையான புத்துமாரியம்மன் கோவில் உள்ளது. இந்த கோவில் பூசாரி, கருவடிக்குப்பத்தை சேர்ந்த தணிகாசலம்(60), நேற்று காலை 7.00 மணிக்கு, சாமி சிலைகளுக்கு பூஜை செய்ய வந்தார். கோவிலில் இருந்த காளிகாதேவி, விநாயகர் சிலை, நாகராஜா சிலை ஆகியவை அடியோடு பெயர்ந்து கீழே சாய்ந்து கிடந்தன. விஷமிகள் சிலையின் பீடத்தை உடைத்து, சிலையை சாய்த்துவிட்டு சென்றது தெரியவந்தது. சிலைகளை சேதப்படுத்திய சம்பவம், அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !