பைரவர் கோவிலில் 25ல் ருத்ர ஹோமம்
ADDED :4497 days ago
கிருமாம்பாக்கம்: நாணமேடு சொர்ண கர்ஷண பைரவர் கோவிலில், வரும் 25ம் தேதி ஏகாதச ருத்ர ஹோமம் நடக்கிறது. தவளக்குப்பம் அடுத்த நாணமேடு சொர்ண பைரவி சமேத, விஜய ஆனந்த கோலாகல, சொர்ண கர்ஷண பைரவர் கோவில் உள்ளது. இக் கோவிலில், மகா பைரவாஷ்டமியை முன்னிட்டு, ஏகாதச ருத்ர ஹோமம், வரும் 25ம் நடக்கிறது. அதனை முன்னிட்டு, அன்று காலை 7.00 மணி முதல் மதியம் 1 மணி வரை, ஏகாதச ருத்ர பாராயண ஜபஹோமம், அபிஷேகம், அலங்காரம் மகா தீபாராதனை நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை முத்து குருக்கள் செய்து வருகிறார்.