கன்னிகா பரமேஸ்வரி கோவிலில் கார்த்திகை தீப திருவிழா
ADDED :4395 days ago
திண்டிவனம்: திண்டிவனம் கன்னிகா பரமேஸ்வரி அம்மன் கோவிலில் கார்த்திகை தீப விழா நடந்தது விநாயகர் , கன்னிகாபரமேஸ்வரி , ராமர் சன்னதிகளில் மஹா அபிஷேகமும் சிறப்பு அலங்காரத்தில் தீபாராதனையும் நடந்தது. மாலை கோவிலின் உச்சியில் தீபம் ஏற்றப்பட்டது. பின்பு கோவில் முழுவதும் தீபங்கள் ஏற்றப்பட்டன. அறங்காவலர் குழுவினர் தியாகராஜன், அருணாசலம், சீனுவாசன், ஸ்ரீஹரன் வாசவி ,கிளப் தலைவர் வெங்கட் ரமணன், முன்னாள் தலைவர் சீனுவாசன் ,வட்டார தலைவர் சிவக்குமார், துணை செயலர் பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.