உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலை விழாவையொட்டி 90 சிறப்பு ரயில்கள்!

சபரிமலை விழாவையொட்டி 90 சிறப்பு ரயில்கள்!

சென்னை: சபரிமலை கோவில் மண்டல பூஜை விழாவையொட்டி, சென்னையில் இருந்து நாகர்கோவில், கொச்சுவேலி மற்றும் கொல்லத்திற்கு, 90 சிறப்பு ரயில்கள் இயக்கப்படுகின்றன.

ரயில்கள் விவரம் வருமாறு: * நவ., 25 ஜனவரி, 20: வாரம் தோறும், திங்கட்கிழமை; சென்னை சென்ட்ரல் கேரள மாநிலம், கொல்லம்; ரயில் எண் 06001; புறப்படும் நேரம், மாலை, 3:15 மணி; சென்றடையும் நேரம் மறுநாள் அதிகாலை, 5:45 மணி.
* நவ., 26 ஜனவரி, 21: வாரம் தோறும், செவ்வாய் கிழமை; கொல்லம் சென்னை சென்ட்ரல்; ரயில் எண் 06002; புறப்படும் நேரம் காலை, 10:45 மணி; சென்றடையும் நேரம், மறுநாள் அதிகாலை, 3:45 மணி.
* நவ., 26 ஜனவரி, 21: வாரம் தோறும் செவ்வாய் கிழமை; நாகர்கோவில் சென்னை எழும்பூர்; சூப்பர் பாஸ்ட் ரயில் எண் 06310; புறப்படும் நேரம், இரவு, 7:40 மணி; சென்றடையும் நேரம், மறுநாள் காலை, 8:50 மணி.
* நவ., 27 ஜனவரி, 22: வாரம் தோறும் புதன்கிழமை; சென்னை எழும்பூர் நாகர்கோவில்; சிறப்பு ரயில் எண் 06309; புறப்படும் நேரம், காலை, 11:00 மணி; சென்றடையும் நேரம், மறுநாள் காலை, 6:55 மணி; வழித்தடம்: சென்னை சென்ட்ரல் அரக்கோணம் ஜோலார்பேட்டை திருவனந்தபுரம் சென்ட்ரல்.
* நவ., 29 ஜனவரி, 24: வாரம் தோறும் வெள்ளிக்கிழமை; கேரள மாநிலம், கொச்சுவேலி சென்னை சென்ட்ரல்; சூப்பர் பாஸ்ட் ரயில் எண் 06316; புறப்படும் நேரம்,மாலை, 3:35 மணி; சென்றடையும் நேரம், மறுநாள் காலை, 8:30 மணி.
* நவ., 30 ஜனவரி, 25: வாரம் தோறும் சனிக்கிழமை; சென்னை சென்ட்ரல் கேரள மாநிலம், கொச்சுவேலி; சூப்பர் பாஸ்ட் சிறப்பு ரயில் எண் 06315; புறப்படும் நேரம், மாலை, 3:15 மணி; சென்றடையும் நேரம், மறுநாள் காலை, 6:50 மணி.
* நவ., 25 ஜனவரி, 20: வாரம் தோறும் திங்கள்கிழமை; கொச்சுவேலி சென்னை சென்ட்ரல்; சிறப்பு ரயில் எண் 06318; புறப்படும் நேரம், இரவு, 8:15 மணி; சென்றடையும் நேரம், மறுநாள் மதியம், 1:15 மணி.
* நவ., 26 ஜனவரி, 21: வாரம் தோறும் செவ்வாய் கிழமை; சென்னை சென்ட்ரல் கொச்சுவேலி; சிறப்பு ரயில் எண் 06317; புறப்படும் நேரம்: மாலை, 5:30 மணி; சென்றடையும் நேரம், மறுநாள் காலை, 10:30 மணி.
*நவ., 27 ஜனவரி, 26: வாரம் தோறும் புதன் மற்றும் வியாழன்; கொச்சுவேலி மங்களூரு. இச்சிறப்பு ரயில்களுக்கு, இன்று முதல் முன்பதிவு செய்யலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !