உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / விநாயகர் கோவிலில் மஹா கும்பாபிஷேகம்

விநாயகர் கோவிலில் மஹா கும்பாபிஷேகம்

பெரம்பலூர்: பெரம்பலூர் அருகே, நாரணமங்கலம் கிராமத்தில் உள்ள ஸ்ரீ கலங்காமல் காக்கும் விநாயகர் கோவிலில் மஹா கும்பாபிஷேகம் நேற்று கோலாகலமாக நடந்தது. விழாவையொட்டி, நேற்று முன்தினம் மாலை, 5 மணிக்கு அனுக்ஞை, விக்னேஷ்வர பூஜை, புன்யாகவாசனம், வாஸ்து சாந்தி, மிருத்சங்கிரகணம், அங்குரம், ரஷாபந்தனம், மூலமந்திர ஹோமம், பூர்ணாகுதி, தீபாராதனை நடந்தது. நேற்று காலை, 6 மணிக்கு மங்கள இசை, விநாயகர் வழிபாடு, சூர்யபூஜை, நாடி சந்தானம், திவ்யாகுதி, தீபாராதனையும், காலை, 9 மணிக்கு மஹா பூர்ணாகுதி, 9.30 மணிக்கு யாத்ராதானம், 9.40 மணிக்கு கடம்புறப்பாடும், காலை, 10 மணிக்கு மஹா கும்பாபிஷேக நிகழ்ச்சியும் நடந்தது. இதைத்தொடர்ந்து, விநாயகருக்கு சிறப்பு பூஜை நடத்தப்பட்டு, பொதுமக்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. விழாவில், நாரணமங்கலம், காரை, தெரணி, ஆலத்தூர்கேட் உள்ளிட்ட பல்வேறு கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் பங்கேற்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !