ஆறுமுகநேரி கோயிலில் சிறப்பு பூஜை
ADDED :4345 days ago
ஆறுமுகநேரி: ஆறுமுகநேரி சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில் கார்த்திகை சோமவாரத்தை முன்னிட்டு சிறப்பு பூஜை நடந்தது. கார்த்திகை மாதம் திங்கட்கிழமை சோமவாரத்தை முன்னிட்டு திருமணமான பெண்கள் மாங்கல்ய பாக்கியம் நிலைக்கவும், கன்னிப் பெண்கள் நல்ல கணவன் கிடைக்கவும் வேண்டி விரதம் இருப்பது வழக்கம். கார்த்திகை மாதம் முதல் சோமவாரத்தை முன்னிட்டு ஆறுமுகநேரி சோமசுந்தரி அம்மன் சமேத சோமநாத சுவாமி கோயிலில் சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடந்தது. இதில் திரளான பெண்கள் கலந்து கொண்டனர். பூஜையை ஐயப்பன் நடத்தினார். நிகழ்ச்சியில் கோயில் மணியம் சுப்பையா, பக்தஜன சபை செயலாளர் கந்தையா, பொருளாளர் அரி கிருஷ்ணன், சைவ வேளாளர் சங்க பொருளாளர் கற்பகவிநாயகம் உட்பட பலர் கலந்து கொண்டனர்.