உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / அஷ்டபைரவி, அஷ்டலட்சுமி கோவிலில் இன்று கும்பாபிஷேகம்

அஷ்டபைரவி, அஷ்டலட்சுமி கோவிலில் இன்று கும்பாபிஷேகம்

துறையூர்: துறையூர் பாலக்காட்டு மாரியம்மன் கோவிலில் இன்று அஷ்டபைரவி, அஷ்டலட்சுமி கோவில் கும்பாபிஷேகம் காலை ஒன்பது மணிக்கு நடக்கிறது.துறையூர் பஸ்ஸ்டாண்டையொட்டி உள்ள பாலக்காட்டு மாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற ஒன்று. இக்கோவிலில் புதியதாக அஷ்டபைரவி, அஷ்டலட்சுமி கோவில் கட்டப்பட்டுள்ளது. இக்கோவில் கும்பாபிஷேகம் இன்று காலை ஒன்பது மணிக்கு நடக்கிறது. கும்பாபிஷேகத்தை முன்னிட்டு, நேற்று காலை ஆறு மணிக்கு மங்கள இசையுடன் திருமுறை பாராயணம் செய்து, கணபதி ஹோமம் நடத்தி முதல்கால யாக பூஜைகள் ஆரம்பமானது. இரவு மூலமந்திர பாராயணம், பூர்ணாஹுதி, மஹா தீபாராதனை செய்து பிரசாதம் வழங்கப்பட்டது. இன்று காலை 5.30 மணிக்கு மங்கள இசையுடன் திருமுறை பாராயணம் செய்து திருப்பள்ளி எழுச்சி தொடர்ந்து கணபதி ஹோமம் இரண்டாம் காலை பூஜை, உயிர் தி ஊட்டுதல், கடம் புறப்பாடு, யாத்ராதானம் செய்து ஒன்பது மணிக்கு கும்பாபிஷேகம் நடக்கிறது. கும்பாபிஷேகத்தை சிவவிநாயக மூர்த்தி சிவாச்சாரியார் நடத்தி வைக்கிறார். கோவில் கோபுரவேலை மற்றும் சுதை வேலைகளை பாஸ்கர் ஸ்தபதி செய்துள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !