சபரிமலையில் குழந்தைகளுக்கு அடையாள அட்டை!
ADDED :4334 days ago
சபரிமலையில் கூட்ட நெரிசலில் குழந்தைகள் காணாமல் போவதைத் தவிர்க்கும் வகையில் புதிதாக அடையாள அட்டை வழங்கும் திட்டத்தை கேரள போலீஸார் அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த ஆண்டு ஏராளமான பக்தர்கள் தங்கள் குழந்தைகளுடன் சபரிமலைக்கு இந்த ஆண்டு வருகை தருகிறார்கள். அவர்கள் பாதுகாப்புக்காக விசேஷ அடையாள அட்டை தயாரிக்கப்பட்டுள்ளது. அதில் அந்த குழந்தைகளின் பெயர், பெற்றோர் பெயர், முகவரி மற்றும் தொலைபேசி எண் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த அட்டை அணிவிக்கப்பட்ட பிறகுதான் குழந்தைகள் மலையேற அனுமதிக்கப்படுகிறார்கள்.