காஞ்சிபுரம் கச்சபேஸ்வரர் கோயிலில் நேர்த்திக் கடன்!
ADDED :4334 days ago
காஞ்சிபுரம்: கச்சபேஸ்வரர் கோயிலில் கார்த்திகை ஞாயிறை முன்னிட்டு விளக்கு நேர்த்திக் கடன் செலுத்தி பக்தர்கள் வழிபட்டனர். இவ்வாறு நேர்த்திக் கடன் செலுத்துவதன் மூலம் நோய்கள் குணமடையும் என்று நம்பப்படுகிறது. ஏராளமான பக்தர்கள் மண்பாண்டங்களில் மாவிளக்கு எடுத்து அதை தலையில் சுமந்து வந்து கோயிலில் நேர்த்திக் கடன் செலுத்தினர்.