திருக்காமீஸ்வரர் கோவிலில் ஐயப்பனுக்கு லட்சார்ச்சனை
ADDED :4456 days ago
வில்லியனூர்: வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவிலில், ஐயப்ப சுவாமிக்கு லட்சார்ச்சனை விழா நடந்தது. வில்லியனூர் திருக்காமீஸ்வரர் கோவிலில், ஐயப்ப சுவாமிக்கு 38ம் ஆண்டு விளக்கு பூஜை மற்றும் 13ம் ஆண்டு லட்சார்ச்சனை விழா கடந்த 22ம் தேதி காலை கணபதி ஹோமத்துடன் துவங்கியது. ஒவ்வொரு நாளும் இரவு 7.00 மணிக்கு லட்சார்ச்சனை மற்றும் தீபாரானை, அன்னதானம் நடந்து வருகிறது. நேற்று நடந்த நிகழ்ச்சியில் நமச்சிவாயம் எம்.எல்.ஏ., கண்ணபிரான், தேவராசு, விஸ்வநாதன், ஜனார்த்தனன் கலந்து கொண்டனர். வரும் டிசம்பர் 19ம் தேதி காலை ஐயப்ப சுவாமிக்கு பஜனை, மாலை 6:30 மணிக்கு சிறுமிகள் விளக்கு தீபத்துடன் சுவாமி வீதியுலா, இரவு 9:30 மணிக்கு அம்பல ஆராதனை நடக்கிறது. ஏற்பாடுகளை ஏகாம்பரம் குருசாமி தலைமையில் ஐயப்ப பக்தர்கள் செய்து வருகின்றனர்.