காசி விஸ்வநாதர் கோயிலில் காலபைரவர் அவதரித்த நாள் கொண்டாட்டம்!
ADDED :4342 days ago
பரமத்தி வேலூர்: பாண்டமங்கலம் காசி விஸ்வநாதர் கோயிலில் காலபைரவர் அவதரித்த நாள், தேய்பிறை அஷ்டமி ஆகியவற்றைக் கொண்டாடும் வகையில், மூன்று நாள்கள் லட்சார்ச்சனையும், சிறப்பு ஹோமங்களும் நடைபெற்றன. ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாதம் பூர நட்சத்திரத்தில் காலபைரவர் அவதரித்த நாள் வெகு சிறப்பாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.