உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலை புதிய அப்பம் பிளான்டுக்கு இறுதி முடிவு!

சபரிமலை புதிய அப்பம் பிளான்டுக்கு இறுதி முடிவு!

சபரிமலை உயர் அதிகாரிகள் கூட்டம் டிச., 2 வது வாரம் சன்னிதானத்தில் நடைபெறுகிறது. இதில், புதிய அப்பம் பிளான்ட் அமைப்பதற்கான டெண்டர் இறுதி செய்யப்படுகிறது. சபரிமலை அபிவிருத்திக்காக, தயாரிக்கப்பட்ட மாஸ்டர் பிளானை செயல்படுத்த, கேரள ஐகோர்ட் உத்தரவுப்படி, முன்னாள் தலைமை செயலாளர் ஜெயக்குமார் தலைமையில், உயர் அதிகார கமிட்டி நியமிக்கப்பட்டுள்ளது. இயற்கையை பாதுகாத்து, சபரிமலை வளர்ச்சிப் பணிகளை மேற்கொள்வது தான், இந்த கமிட்டியின் நோக்கம். சபரிமலை மாஸ்டர் பிளான் திட்டப்படி, முழுவதும் இயந்திரம் மூலமே அப்பம் தயாரிக்க வேண்டும். இதற்காக, 10 கோடி ரூபாய் மதிப்பீட்டில், திட்டம் தயாரிக்கப்பட்டு, டெண்டர் கோரப்பட்டு உள்ளது. டெண்டர்களை ஆய்வு செய்து, இறுதி செய்வதற்காக, உயர்மட்ட கமிட்டி கூட்டம் டிச., 2 வது வாரத்தில், சன்னி தானத்தில் கூடுகிறது. இதில், குன்னாறு அணையிலிருந்து சன்னிதானத்துக்கு தண்ணீர் கொண்டு வர, வனத்துறை ஏற்படுத்தி வரும் தடைகள் குறித்து, ஆய்வு செய்து நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !