உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / ஐயப்ப பக்தர்களுக்காக கட்டணமில்லா ஓய்வறை!

ஐயப்ப பக்தர்களுக்காக கட்டணமில்லா ஓய்வறை!

தேனி: கர்நாடகா, ஆந்திரா, தமிழகத்தின் சென்னை உள்ளிட்ட மாவட்டங்களை சேர்ந்த பெரும்பாலான பக்தர்கள், சபரிமலைக்கு, திண்டுக்கல் மற்றும் மதுரை வழியாக செல்வோர் தேனி மாவட்டத்தை கடந்துதான் சபரிமலை செல்கின்றனர். நீண்ட தூரம் வாகனங்களில் பயணிக்கும் பக்தர்களின் நலன் கருதி, தேனி உப்புகோட்டை பிரிவு அருகே வாகனங்களை நிறுத்தி ஓய்வெடுக்க வசதியாக, தேனி ஐயப்ப பக்தர்கள் சேவை மையம் சார்பில் ஏற்பாடு செய்துள்ளனர். இங்கு, 24 மணி நேரமும் பக்தர்களுக்கு அன்னதானம், இலவச முதலுதவி பொது மருத்துவ முகாம், ஓய்வறை, கழிப்பறை, குளியலறை வசதிகளை சேவை நோக்கில் செய்துள்ளனர். இந்த சேவை மையம் ஜனவரி 17 ம் தேதி வரை செயல்படும். பக்தர்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொள்ளலாம். மேலும் விபரங்களுக்கு: 9840031325, 9842360577. தேனி செந்தில் முருகன் மருத்துவமனை, ரோட்டரி கிளப் ஆப் தேனி மெட்ரோ, மதுரை மீனாட்சி மிஷன் மருத்துவமனை இணைந்து, இந்த சேவை மையத்திற்கு ஏற்பாடு செய்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !