உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தூத்துக்குடி ஆதிபராசக்தி சக்தி பீடத்தில் கலச விளக்கு வேள்வி பூஜை

தூத்துக்குடி ஆதிபராசக்தி சக்தி பீடத்தில் கலச விளக்கு வேள்வி பூஜை

தூத்துக்குடி: தூத்துக்குடி திரு.வி.க நகர் ஆதிபராசக்தி சக்தி பீடத்தில் கலச விளக்கு வேள்வி பூஜை நடந்தது. சக்தி பீடத்தின் வருஷாபிஷேக விழா, குரு பூஜை, விநாயகர் பூஜை மற்றும் சக்தி பூஜையுடன் தொடங்கியது. அன்னை ஆதிபராசக்திக்கு சிறப்பு அபிஷேகம் ஆராதனையும் நடந்தது. பூஜையை ஆதிபராசக்தி ஆன்மீக இயக்கத்தின் மாவட்ட தலைவர் இராமலிங்கம், பொருளாளர் வடிவேல் ராஜன், அய்யாச்சாமி, துணைத்தலைவர் ராஜூ ஆகியோர் துவக்கி வைத்தனர். ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சிறப்பு சங்கல்பம் செய்தனர். வேள்வி பூஜையில் வைக்கப்பட்ட சக்தி கலச புனித நீர் கோபுர கலசத்துக்கு எடுத்துச் செல்லப்பட்டது. சக்தி பீட தலைவர் கிட்டப்பா, துணைத் தலைவர் ஜோதி குமார், செயலாளர் கணேஷ், பொருளாளர் சொக்கலிங்கம் ஆகியோர் கோபுர கலசத்திற்கும், கருவறைவில் கோமதி, கற்பகம்கிட்டப்பா ரம்யாஜோதி, சாரதாகணேஷ் ஆகியோர் ஆதிபராசக்தி அன்னைக்கு அபிஷேகம் செய்தனர். ஆன்மீக ஊர்வலத்தை போலீஸ் இன்ஸ்பெக்டர் அரிஹரன் துவக்கி வைத்தார். அன்னதானம், பரதநாட்டிய கலை நிகழ்ச்சி நடந்தது. சங்க தலைவர் செங்குட்டுவன், அழகர் ஜூவல்லர்ஸ் பத்மநாபன், வேலவன் ஸ்டோர்ஸ் தங்கவேல், வியாபாரிகள் சங்கத்தலைவர் விநாயகமூர்த்தி, பிருந்தாவன் ஹோட்டல் மணி, திருநெல்வேலி லாலா ஸ்வீட்ஸ் மயில் வாகனன், கல்யாண் ஜூவல்லர்ஸ் பேச்சியப்பன், திருவடி, சங்கர், ஹோட்டல் சங்க தலைவர் செந்தில், அபிஸ், பிரேம், மக்கள் சக்தி இயக்கம் செயலாளர் கணேசன், முருகன் ஸ்டோர்ஸ் குமார், ஷிப்பிங் மகாலிங்கம், தஷ்ணாமூர்த்தி, சத்யா, சம்பத் ராவ், சுப்ரமணியன், ராஜகோபால், நல்லபெருமாள் ஆகியோர் கலந்து கொண்டனர். விழா ஏற்பாடுகளை விழாக்குழு தலைவர் செந்தில் ஆறுமுகம், வேம்பு கிருஷ்ணன், காமராஜ், சுரேந்திரன், ராமசாமி, முத்துகுமார், காசிவிஸ்வநாதன், ராஜகோபால், கணேஷ், ராமசுப்பிரமணியன் ஆகியோர் செய்திருந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !