ஆதிகும்பேஸ்வரசுவாமி கோயிலுக்கு ஜெனரேட்டர்!
ADDED :4345 days ago
கும்பகோணம்: ஆதிகும்பேஸ்வரசுவாமி கோயிலுக்கு குடந்தையை தலைமையிடமாகக் கொண்டு இயங்கிவரும் சிட்டியூனியன் வங்கி சார்பில் ரூ. 5 லட்சத்தில் ஜெனரேட்டர் உபயமாக வழங்கப்பட்டது. சிறப்புடைய இக்கோயிலில் பக்தர்கள் வசதிக்காக பிரதான வாசலின் வடபுறத்தில் நிறுவப்பட்டுள்ள இந்த 40 கே.வி. திறனுடைய ஜெனரேட்டரை சிட்டியூனியன் வங்கி தலைவர் பாலசுப்ரமணியன் இயக்கி வைத்தார்.