பவானி கூடுதுறையில் அய்யப்பசாமிக்கு ஆறாட்டு விழா!
ADDED :4345 days ago
பவானி: திருப்பூர் அய்யப்பசாமிக்கு பவானி கூடுதுறையில் நேற்று ஆறாட்டு விழா நடந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். காலேஜ் ரோட்டில் உள்ள அய்யப்பசாமி கோவிலில் அய்யப்பன் பக்த ஜனசங்கம் சார்பில் 54–வது ஆண்டு மண்டல பூஜை விழா கடந்த 22–ந்தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. தினமும் சிறப்பு பூஜைகள் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் முக்கிய நிகழ்ச்சியான அய்யப்பசாமிக்கு ஆறாட்டு விழா நேற்று நடந்தது.