கீழப்பாவூரில் மழைவேண்டி பசுவன் கோலாட்டம்
ADDED :4341 days ago
பாவூர்சத்திரம்: கீழப்பாவூர் தமிழர் தெருவில் மழைவேண்டி பசுவன் கோலாட்டம் நடந்தது. கீழப்பாவூர் தமிழர் தெருவில் ஆண்டுதோறும் மழைவேண்டி ஏர்உழவர் பொம்மை மற்றும் பசு, கன்று பொம்மைகளுடன் ஊர்வலம் மற்றும் பெண்கள், குழந்தைகளின் பசுவன் கோலாட்டம் நடந்து வருகிறது. இந்த ஆண்டு ராமர் பஜனை மண்டபம் முன் நடந்த விழாவில் மழைவேண்டி பசுவன் கோலாட்டம் மற்றும் ஏர் உழவர், பொம்மைகளுடன் ஊர்வலமும் நடந்தது.
ஊர்வலத்தில் மழைவேண்டி இறைவனை நோக்கி பாடல்கள் பாடப்பட்டது. நிகழ்ச்சியில் பெண்கள் மற்றும் குழந்தைகள் பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர்.