இலுப்பையூரணியில் மஹாதேவ அஷ்டமி விழா
ADDED :4341 days ago
கோவில்பட்டி: கோவில்பட்டி அருகே இலுப்பையூரணியில் மஹாதேவ அஷ்டமி விழா நடந்தது.ஒவ்வொரு ஆண்டும் கார்த்திகை மாத தேய்பிறை அஷ்டமியில் நடைபெறும் மஹா தேவ அஷ்டமி விழா கோவில்பட்டி அருகே வடக்கு இலுப்பையூரணியில் நடந்தது. மஹா தேவ பஜனை மடத்தில் நடந்த விழாவில் கும்பபூஜை, ருத்ரஜெபபாராயணம், பஜனை, சிறப்பு அபிஷேகம், அலங்கார தீபாராதனை, அன்னதானம் நடந்தது. சஹஸ்ர நாமமும், பெண்கள் கும்மியும், கோவில்பட்டி மற்றும் இலுப்பையூரணி பாகவதர்கள் திவ்யநாம பஜனையும் நடத்தினர். பிராமணர் சமுதாய மகளிரணியினர் மழை வேண்டி கோலாட்ட விழா நடத்தினர். பஜனை மடத்திலிருந்து கோலாட்டம் ஆடியபடி பசுவனை குளத்தில் கரைத்து மழை வேண்டி வழிபாடுகள் செய்தனர். விழாவில் பிராமணர் சங்க தலைவர் செண்பகராமய்யர், துணைதலைவர் சங்கரய்யர், செயலாளர் பாலசுப்பிரமணியய்யர் மற்றும் நிர்வாகிகள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.