ஸ்ரீரங்கம் கோவிலில் உண்டியல் திறப்பு!
ADDED :4337 days ago
ஸ்ரீரங்கம்: ஸ்ரீரங்கம் கோவிலில் உண்டியல்கள் நேற்று திறக்கப்பட்டு பக்தர்கள் செலுத்திய காணிக்கை எண்ணப்பட்டன. உண்டியல் திறந்து எண்ணும் பணியில் திருக்கோவில் பணியாளர்கள் அலுவலர்கள், வங்கி ஊழியர்கள் மற்றும் சத்ய சாய் குழுவினர் ஈடுபட்டிருந்தார்கள். உண்டியல்களில் ரூ.38 லட்சத்து 24 ஆயிரத்து 49 ரொக்கமும், 71 கிராம் தங்கம், 790 கிராம் வெள்ளி ஆகியவை இருந்தன.