உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கோவில் பூசாரிகளுக்கு பூணூல் அணிவிப்பு!

கோவில் பூசாரிகளுக்கு பூணூல் அணிவிப்பு!

சென்னை: கோவில் பூசாரிகள் நலச் சங்கம் சார்பாக, 50 கிராம கோவில் பூசாரிகளுக்கு, ஆலய வழிபாட்டு பயிற்சி அளிக்கப்பட்டு, பூணூல் அணிவிக்கப்பட்டது. கோவில் பூசாரிகள், நலச் சங்கம் சார்பாக, எட்டு ஆண்டுகளாக, கிராம கோவில் பூசாரிகளுக்கு, ஆலய வழிபாட்டு பயிற்சி முகாம் நடத்தப்படுகிறது. இதில், தெய்வங்களுக்கு உண்டான சங்கல்பம், அர்ச்சனை, மூல மந்திரங்கள் போன்றவை கற்றுத் தரப்படும். இந்த ஆண்டுக்கான பயிற்சி முகாம், சேலத்தில் உள்ள, நாகவள்ளி மெயின் ரோட்டில் நடந்தது. இதில், சேலம் மாவட்டத்தில் உள்ள, 50 கிராம கோவில் பூசாரிகள் பங்கேற்றனர். இதில், பயிற்சி பெற்றவர்களுக்கு, நேற்று முன்தினம், உபநயனம் செய்விக்கப்பட்டு, பூணூல் அணிவிக்கப்பட்டது. கோவில் பூசாரிகள் நலச் சங்க தலைவர், வாசு கூறுகையில், ""கிராமப் புறங்களில் உள்ள பூசாரிகள், முறையான பூஜைகள் நடத்தவே, இப்பயிற்சி முகாமை நடத்தி வருகிறோம். இதில், இளைய தலைமுறையினர் அதிகளவில் பங்கேற்று வருகின்றனர், என்றார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !