ராமேஸ்வரம் உண்டியல் வசூல் ரூ.42.64 லட்சம்!
ADDED :4337 days ago
ராமேஸ்வரம்: ராமேஸ்வரம் ராமநாதசுவாமி கோயிலில், நவ., 28ம் தேதி, கோயில் இணை கமிஷனர் செல்வராஜ் தலைமையில், உண்டியல்கள் திறக்கப்பட்டன. பர்வதவர்த்தினி பெண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவிகள், கோயில் ஊழியர்கள் இரண்டு நாள்களாக எண்ணினர். 42 லட்சத்து 64 ஆயிரம் 354 ரூபாய், 27 கிராம் தங்கம், 2 கிலோ 910 கிராம் வெள்ளி காணிக்கை இருந்தன.