உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / இருமுடி செலுத்தும் விழா பக்தர்களுக்கு அழைப்பு

இருமுடி செலுத்தும் விழா பக்தர்களுக்கு அழைப்பு

மேல்மருவத்தூர்: ஆதி பராசக்தி சித்தர் பீடத்தில், சக்தி மாலை அணிந்து, இருமுடி செலுத்தும் விழா கடந்த, 22ம் தேதி துவங்கியது. ஜனவரி, 15ம் தேதி வரை நடக்கிறது. இம்மாவட்ட பக்தர்கள், மேல்மருவத்தூர் செல்ல பஸ், ரயில் வசதி செய்யப்பட்டுள்ளது. கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு தங்குமிடம், இருமுடி செலுத்தும் அனைத்து பக்தர்களுக்கும் உணவு வழங்கப்படுகிறது. இருமுடி செலுத்தும் போது ஏற்படும் கூட்ட நெரிசலை தவிர்க்க, ஆன் லைன் புக்கிங் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் ஆன் லைனில் புக்கிங் செய்து, குறிப்பிட்ட நாளில் தரிசனம் செய்யலாம். வயதானவர்கள், உடல் நலம் சரியில்லாதவர்கள் மற்றும் குழந்தைகள் இருமுடி செலுத்த, தனி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன் மூலம் சிரமம் இன்றி தரிசனம் செய்யலாம். ஜனவரி, 16ம் தேதி, மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி சித்தர் பீடத்தில் தைப்பூச ஜோதி நடக்கிறது. இவ்விழாவில் பங்கேற்க விரும்புவோர், மேல்மருவத்தூர் ஆதிபராசக்தி வழிபாட்டு மன்றங்கள், ஆதி பராசக்தி சித்தர் சக்தி பீடங்கள் அல்லது ஈரோடு மாவட்ட அலுவலகத்தை, 0424-6542425 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !