நாகநாத சுவாமி கோவிலில் பந்தல்கால் முகூர்த்தம்!
ADDED :4337 days ago
கும்பகோணம்: திருநாகேஸ்வரம் நாகநாத சுவாமி கோவிலில் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழாவை முன்னிட்டு, வெள்ளிக்கிழமை பந்தல்கால் முகூர்த்தம் நடைபெற்றது. ராகுவின் தலமாக போற்றப்படும் இந்தக் கோவிலில் கார்த்திகை கடைஞாயிறு பெருவிழா ஆண்டுதோறும் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். இந்த விழா டிசம்பர் 6-ம் தேதி காலை 9 மணிக்கு கொடியேற்றத்துடன் தொடங்குகிறது.