ஷீரடி சாய்பாபாவிற்கு ரூ.40 லட்சம் காணிக்கை!
ADDED :4336 days ago
ஷீரடி: ஷீரடி சாய்பாபா சன்ஸ்தான் அறக்கட்டளைக்கு சென்னையைச் சேர்ந்த பெண் பக்தர் ஒருவர் ரூ.40 லட்சம் காணிக்கையாக அளித்துள்ளார். இறந்த தனது மாமியார் லீலாவதி தேவியின் கடைசி ஆசையை பூர்த்தி செய்வதற்காக இந்த காணிக்கையை அளித்ததாக மருமகள் சரளாதேவி தெரிவித்துள்ளார். தங்கள் குடும்பத்தாரின் பெயரில் இருந்த சொத்தை விற்று இந்த காணிக்கையை கோயிலுக்கு அவர் அளித்துள்ளார். மேலும் சாய்பாபா அறக்கட்டளைக்கு சொந்தமான மருத்துவமனைக்கு ரூ.14 லட்சம் மதிப்பிலான வென்டிலேட்டரையும் அவர் அளித்துள்ளார்.