கள்ளக்குறிச்சியில் மழைவேண்டி ஐயப்பனுக்கு சிறப்பு பூஜை!
ADDED :4336 days ago
கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சியில் மழைவேண்டி ஐயப்ப சாமிக்கு மணிமுக்தா அணை பகுதியில் வைத்து பக்தர்கள் சிறப்பு பூஜைகள் செய்தனர். கள்ளக்குறிச்சி அடுத்த அகரக்கோட்டாலம் பகுதி ஐயப்ப பக்தர்கள் மழைவேண்டி ஐயப்பசாமி சிலையை மணிமுக்தா அணைப்பகுதியில் வைத்து சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டது. 108 திரவியங்களைக்கொண்டு அபிஷேக, ஆராதனைகளை தண்டலை குருசாமி கணேசன் தலைமையிலான ஐயப்ப பக்தர்கள் செய்தனர். நிகழ்ச்சியில் குருசாமிகள் சோலை, ராமமூர்த்தி, கொளஞ்சி, கிருஷ்ணமூர்த்தி, முருகேசன், பாலகிருஷ்ணன், ஊராட்சி தலைவர் கந்தசாமி, கவுன்சிலர்கள் வடிவேல், முருகேசன் உள்ளிட்ட 100க்கும் மேற்பட்ட ஐயப்ப பக்தர்கள் பங்கேற்றனர்.