உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கூரம் பல்லவ பரமேஸ்வரன் கோயிலுக்கு புதிய திருவாட்சி ஆபரணம்!

கூரம் பல்லவ பரமேஸ்வரன் கோயிலுக்கு புதிய திருவாட்சி ஆபரணம்!

காஞ்சிபுரம்: கூரம் வித்ய வினீத பல்லவ பரமேஸ்வரன் கோவிலுக்கு, சென்னையை சேர்ந்த நன்கொடையாளர் ஒருவர் பித்தளையால் ஆன, திருவாட்சி ஆபரணங்களை வழங்கி உள்ளார். காஞ்சிபுரம் அடுத்த, கூரம் கிராமத்தில் வித்யா வினீத பல்லவ பரமேஸ்வரன் கோவில் உள்ளது. இக்கோவில், தூங்கானை மாடக் கோவில் வடிவில் கட்டப்பட்டுள்ளது. தற்போது, இக்கோவில் தொல்பொருள் துறை பாதுகாப்பில் உள்ளது. இந்து சமய அறநிலையத்துறை நிர்வாகம் பராமரித்து வருகிறது. இங்குள்ள சிவலிங்கக் கருவறை பீடம் சதுரவடிவில் காணப்படுகிறது. இக்கோவில், 7ம் நூற்றாண்டில் கட்டப்பட்ட கோவில் என, கூரம் செப்பேடு தகவல் தெரிவிக்கிறது. இங்குள்ள மூலவர் சிவன், விநாயகர், பாலசுப்பிரமணியர் ஆகியோருக்கு, பித்தளை மூலவர் பிரபை என அழைக்கப்படும் திருவாட்சி ஆபரணமும்,  மூலவருக்கு சதுர வடிவில் பீட ஆபரணமும், பாலசுப்பிரமணியருக்கு வேல் மற்றும் மயில் கம்பும், சிவனுக்கு நாகாபரணமும் சென்னையை சேர்ந்த சந்திரசேகரன் வழங்கியுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !