உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / கன்னியாகுமரி பகவதி அன்னதான உண்டியல் காணிக்கை ரூ.54 ஆயிரம்!

கன்னியாகுமரி பகவதி அன்னதான உண்டியல் காணிக்கை ரூ.54 ஆயிரம்!

கன்னியாகுமரி: பகவதி அம்மன் கோவிலுக்கு வரும் பக்தர்களுக்காக தமிழக அரசின் இந்து சமய அறநிலைய ஆட்சித்துறை சார்பில் அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி தினமும் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்திற்காக கோவில் மண்டபத்தில் தனியாக ஒரு உண்டியல் வைக்கப்பட்டுள்ளது. இங்கு வரும் பக்தர்கள் அன்னதான திட்டத்திற்கான காணிக்கையை அந்த உண்டியலில் செலுத்துவது வழக்கம். இந்த மாதத்திற்கான உண்டியல் நேற்று திறந்து எண்ணப்பட்டது. உண்டியல் மூலம் ரூ.54 ஆயிரத்து 270 காணிக்கையாக வசூலாகி இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !