அம்மையை தடுக்கும் அஷ்டமி கதை
ADDED :4491 days ago
வெள்ளிக்கிழமைகளில் அம்பாளை வழிபடுவர். அஷ்டமியன்று பைரவர், கிருஷ்ணரை வழிபடுவர். அஷ்டமி திதிகளில் அம்பாளின் கதையைக் கேட்டாலோ படித்தாலும் நன்மை வரும். குறிப்பாக, அஷ்டமி திதியன்று அம்பாளின் கதை படித்தாலோ, கேட்டாலோ அம்மை நோய் வராது என்பது நம்பிக்கை. மேலும், அந்நாளில் அம்பிகையின் கதை கேட்பவர்களை கிரகதோஷம் ஏதும் செய்யாது. பிரிந்த உறவினர்கள், நண்பர்கள் மீண்டும் ஒன்று சேர்வர். திருடர்களால் பயமில்லை. நெருப்பு, தண்ணீர், ஆயுதம் போன்றவற்றால் ஏற்படும் கண்டங்கள் இருந்தால் ஓடிப்போய் விடும். நவமி, சதுர்த்தசி திதிகளிலும் அம்பாளின் கதையை வாசிக்கலாம்.