உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / யோகி ராம்சுரத்குமார் 95ம் ஆண்டு ஜெயந்தி விழா!

யோகி ராம்சுரத்குமார் 95ம் ஆண்டு ஜெயந்தி விழா!

திருக்கோவிலூர்: திருவண்ணாமலை யோகி ராம்சுரத்குமாரின், 95ம் ஆண்டு ஜெயந்தி விழாவை முன்னிட்டு, அதிஷ்டானத்தில் ஏகாதசருத்ர ஜபம் நடந்தது. திருவண்ணாமலையில் நடந்த யோகி ராம்சுரத்குமாரின், 95ம் ஆண்டு ஜெயந்தியின் இரண்டாம் நாளான நேற்று காலை, 7:00 மணிக்கு பிரதான் மந்திரில் , அபிஷேகம், அர்ச்சனை மற்றும் பூஜைகள் நடந்தன. ஆஸ்ரம நிர்வாகத்தின் அதிகாரபூர்வ வெப்சைட், www.yogiramsuranõkumarashram.com, என்ற முகவரியில் புதிதாக துவங்கப்பட்டது. இதனை, தபோவனம் ஞானானந்தா நிக்கேதன் ஸ்ரீ நித்யானந்தகிரி சுவாமிகள் துவக்கி வைத்தார். இணையதளத்தில் இடம்பெற்றுள்ள தகவல்கள் பற்றி, ஜஸ்டிஸ் அருணாச்சலம் விளக்கினார். மாலை, 4:00 மணிக்கு சென்னை சற்குருநாத ஓதுவாரின் தேவாரம், 6:00 மணிக்கு இம்மானுவெல் குழுவினரின் சங்கீதம் ஆகியவை நடந்தன. இரவு, 7:45 மணிக்கு வெள்ளி ரதத்தில் உற்சவர் உலா மற்றும் ஆரத்தி நிகழ்ச்சி நடந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !