திருப்பதி கோவிலுக்கு 10 டன் காய்கறிகள்!
ADDED :4336 days ago
சென்னை: திருப்பதி, தேவஸ்தானத்துக்கு, 10 டன் காய்கறிகளை, இலவசமாக கோயம்பேடு வியாபாரிகள் வழங்கினர். திருப்பதி தேவஸ்தானத்தில், அன்னதான திட்டம் செயல்பாட்டில் உள்ளது. இதற்காக, சென்னை கோயம்பேடு காய்கறி வியாபாரிகள் சங்கத்தினர், நேற்று முன்தினம், 1.5 லட்சம் ரூபாய் மதிப்பிலான, 10 டன் காய்கறிகளை, திருப்பதி தேவஸ்தானத்துக்கு இலவசமாக அளித்தனர். திருப்பதி தேவஸ்தானத்தில் இருந்து வந்த லாரியில், வியாபாரிகள், காய்கறிகளை ஏற்றி அனுப்பினர். கோயம்பேடு காய்கறி வியாபாரிகள் சங்க செயலர் சந்திரன், ஆலோசகர் சவுந்தரராஜனும் கூறுகையி"ல், ""ஒன்பது ஆண்டுகளாக, மாதந்தோறும், 10 டன் காய்கறிகளை, திருப்பதி தேவஸ்தானத்துக்கு இலவசமாக அனுப்பி வருகிறோம்; இந்த சேவை தொடரும், என்றனர்.