தஞ்சாவூர் பெரிய கோவிலில் சனிப்பிரதோஷ பூஜை!
ADDED :4370 days ago
தஞ்சாவூர்: பிரதோஷ வேளையின் போது சிவன் நந்தயின் இரு கொம்புகளுக்கிடையில் நடனமாடுவதாக ஐதீகம். இதனடிப்படையில் தான் சிவாலயங்களில் நந்திக்கு பலவித அபிஷேகம் செய்யப்பட்டு சிறப்பு பூஜைகள் நடத்தப்படுகிறது. தஞ்சாவூர் பெரிய கோவிலில் சனி பிரதோஷ வழிபாடு நேற்று முன்தினம் சிறப்பாக நடைபெற்றது. இதில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர். பிரதோஷத்தை முன்னிட்டு, நந்திக்கு சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது.