சபரிமலை அரவணை பாயாசம் தயாரிக்க தேனி வெல்லம்!
பெரியகுளம்: கேரள மாநிலம்,சபரிமலை அய்யப்பன் கோவில் அரவணை பாயாசம் தயாரிக்க, தேனி மாவட்டம், லட்சுமிபுரத்தில் இருந்து, தினமும், வெல்ல மூட்டைகள் அனுப்பப்படுகின்றன. தேனிமாவட்டம்,பெரியகுளம் அருகே, லட்சுமிபுரத்தில், வெல்லம் ஏல மண்டிகள் உள்ளன. தென் மாவட்டங்களில், வெல்லம் விலையை, நிர்ணயம் செய்வதில், லட்சுமிபுரம் மார்க்கெட் முன்னிலையில் உள்ளது. லட்சுமிபுரம் பகுதியில் விளையும் கரும்பில், இனிப்புத் தன்மை அதிகமாகவும், கரும்புச் சாறில் மணம் இருப்பதாலும், எப்போதும்,இங்குள்ள, மார்கெட்டில், வெல்லத்திற்கு, கிராக்கி அதிகம். 42 கிலோ, கலர் வெல்ல மூட்டை, 1700 ரூபாய், பச்சைவெட்டு, 1650 ரூபாய், செங்கால், 1600 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. சபரிமலை அய்யப்பன் கோவில் பிரசாதமான, அரவணை பாயாசம் தயாரிக்க, இங்கிருந்து, தினமும், 200 முதல், 300 வெல்ல மூட்டைகள் அனுப்பப்படுகின்றன. இவை, "இன்னும், அதிகரிக்கும் என, வியாபாரிகள் தெரிவித்தனர்.