உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / தினமலர் செய்தி எதிரொலி: பழநியில் ஆக்கிரமிப்பு அகற்றம்!

தினமலர் செய்தி எதிரொலி: பழநியில் ஆக்கிரமிப்பு அகற்றம்!

பழநி: பழநிகோயில் அடிவாரம், கிரிவீதியில், பக்தர்களுக்கு இடையூறாக இருந்த ஆக்கிரமிப்புகள் அகற்றப்பட்டது. பழநி வடக்குகிரிவீதி, பாதவிநாயகர் கோயில், வின்ச் ஸ்டேஷன் உட்பட அடிவாரம் பகுதிகளில், பலரும் ஆக்கிரமித்து, நடுரோட்டில் தள்ளுவண்டி, பழக்கூடை, பொம்மைக்கடைகள் வைத்து வியாபாரம் செய்ய வந்தனர். இதனால், பக்தர்களுக்கு இடையூறு ஏற்பட்டது. இது குறித்து தினமலர் நாளிதழில் படத்துடன் செய்தி வெளியானது. இதையடுத்து, பழநி ஆர்.டி.ஓ.,சுந்தரராஜ், கோயில் இணை ஆணையர் (பொ) ராஜமாணிக்கம், நகராட்சி கமிஷனர் சரவணக்குமார் ஆகியோர் தலைமையிலான, தேவஸ்தான, நகராட்சி பணியாளர்கள் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்றி, மீண்டும் கடைகள் வைக்ககூடாது, என எச்சரிக்கை செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !