தர்மபுரி கோவிலில், 28ம் ஆண்டு லட்சார்ச்சனை
ADDED :4436 days ago
தர்மபுரி: தர்மபுரி நெசவாளர் நகர் சக்தி விநாயகர், வேல் முருகன் கோவிலில், 28ம் ஆண்டு குமார சஷ்டி லட்சார்ச்சனை விழா இன்று (டிச., 3) துவங்குகிறது. விழாவையொட்டி, கணபதி ஹோமம், ஸ்வாசிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், இன்று முதல் வரும், 7ம் தேதி வரை காலை, மாலை, இருவேளையும் பன்னிரு திருமுறைகள் பாராயணத்துடன், லட்சார்சனை நடக்கிறது. தொடர்ந்து, 8ம் தேதி காலை, 9 மணிக்கு குமாரசஷ்டி பூர்த்தி ஹோமம் நடக்கிறது. ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர், செங்குந்த மரபினர் செய்துள்ளனர்.