திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில் நிலவறை கண்டுபிடிப்பு!
ADDED :4333 days ago
திருப்போரூர்: திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், நிலவறை இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருப்போரூர் கந்தசுவாமி கோவிலில், திருப்பணி நடந்து வருகிறது. கடந்த சில தினங்களாக, மடப்பள்ளியில் வேலைகள் நடந்து வந்தன. அதில் ஒரு பாறையை அகற்றிய போது, 12 அடி நீளமும், 6 அடி அகலமும், 5 அடி ஆழமும் கொண்ட நிலவறை இருப்பது தெரிய வந்தது. பொதுமக்கள் ஆர்வத்துடன் நிலவறையை பார்த்து செல்கின்றனர். தொடர்ச்சியாக நிலவறையோ, சுரங்கமோ இருந்திருக்குமா என்று தெரியவில்லை. இதுகுறித்து, கோவில் அதிகாரியிடம் கேட்டபோது மடப்பள்ளியில் தண்ணீர் தொட்டியாக பூமிக்குள் அமைந்திருக்கலாம். தேவைப்பட்டால் ஆய்வு நடத்தப்படும் என்றார்.