திருமலை ஏழுமலையான் ஆரம் திருச்சானூர் தாயாருக்கு அணிவிப்பு!
ADDED :4333 days ago
திருப்பதி: திருமலை ஏழுமலையானின், லட்சுமி ஆரம் மற்றும் ஸஹஸ்ர காசு மாலை, திருச்சானூர் பத்மாவதி தாயாருக்கு அணிவிக்கப்பட்டது. திருச்சானூர் பத்மாவதி தாயார் கோவில், பிரம்மோற்சவத்தின் ஐந்தாம் நாளான, இன்று, தாயார் பல்லக்கிலும், இரவு யானை வாகனத்திலும், மாட வீதிகளை வலம் வந்தார். யானையில், மகாலட்சுமி அலங்காரத்தில், பவனி வந்த தாயாருக்கு, ஏழுமலையானின், லட்சுமி ஆரம், ஸஹஸ்ர காசு மாலை அணிவிக்கப்பட்டது.