உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேக விழா!

பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேக விழா!

பேரூர்: பேரூர் பட்டீஸ்வரர் கோவிலில் அன்னாபிஷேக விழா நடந்தது. இதையொட்டி நேற்று முன் தினம் காலை 9.00 மணிக்கு, விக்னேஷ்வர பூஜை, புண்யாகவாசன பூஜையுடன் விழா தொடங்கியது. தொடர்ந்து, ஹோம பூஜை, 16 வகை திரவியங்களால், 108 வலம்புரி சங்குகளை வைத்து அபிஷேக பூஜை நடத்தப்பட்டு, மதியம் பட்டீஸ்வரர், பச்சைநாயகி அம்மனுக்கு அபிஷேக பூஜை நடந்தது. தொடர்ந்து, மாலை 4.00 மணிக்கு மேல் விஷேச திரவியங்களுடன் அபிஷேகம் செய்யப்பட்டு, 51 கிலோ அரிசி, காய்கனி, பழவகைகளை வைத்து அலங்காரம் செய்து, 16 உபசார வகை பூஜை நடத்தப்பட்டு,இரவு வரை அலங்கார கோலத்தில் பக்தர்களுக்கு சாமி அருள்பாலித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !