ஐயப்ப சுவாமிக்கு நடை வரவு!
ADDED :4497 days ago
ஐயப்ப சுவாமிக்கு உண்டியலில் போடாமல் கருவறைக்குள்ளேயே பக்தர்கள் செலுத்தும் காணிக்கையை நடை வரவு என்கிறார்கள். ஐயப்பனின் பாதங்களில் இந்த காணிக்கையை பக்தர்கள் படைக்கிறார்கள். இவ்வாறு கிடைக்கும் நாணயங்களே லட்சக்கணக்கில் உள்ளது. சில பணக்காரர்கள் தங்கம், நவரத்தினங்கள், பட்டு ஆகியவற்றையும் ஐயப்பனின் பாதங்களில் சொரிகிறார்கள். கேரளாவில் அனேகமாக ஐயப்பன் கோயிலில்தான் இந்த அளவுக்கு நடை வரவு கிடைக்கிறது.