உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலையில் சேவை செய்ய கல்லூரி மாணவர்கள் பயணம்!

சபரிமலையில் சேவை செய்ய கல்லூரி மாணவர்கள் பயணம்!

குமாரபாளையம்: அகிலபாரத ஐயப்ப சேவா சங்கத்தின் சார்பில், குமாரபாளையத்தில் இருந்து, ஆண்டு தோறும், மூவாயிரத்துக்கும் மேற்பட்ட பக்தர்கள், சபரிமலை ஐயப்பனை தரிசித்து வருகின்றனர். நடப்பாண்டில், சபரிமலையின், எரிமேலையில் இருந்து சன்னிதானம் வரை, கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு சேவை செய்வதற்காக, குமாரபாளையத்தில் இருந்து, கல்லூரி மாணவர்கள், 50 பேர், நேற்று முன்தினம் இரவு, சபரிமலைக்கு புறப்பட்டனர். அவர்கள், அங்கு, 15 நாட்கள் முகாமிட்டு, சேவை செய்வதால், அவர்களுக்கு தேவையான, உணவு, போக்குவரத்து வசதி, தங்கும் இடம் ஆகியவை இலவசமாக செய்யப்பட்டுள்ளது. அகிலபாரத ஐயப்ப சேவா சங்கத்தின், ஈரோடு மாவட்டச் செயலாளர் ஐயப்பன், மாநில தொண்டர் படை அமைப்பாளர் ஜெகதீஸ், நிர்வாகி பிரபு உட்பட பலர், மாணவர்களை வழியனுப்பி வைத்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !