உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / சபரிமலை சன்னிதானம் அருகே யானைகள் நடமாட்டம்: புல்மேடு பக்தர்களுக்கு கட்டுப்பாடு!

சபரிமலை சன்னிதானம் அருகே யானைகள் நடமாட்டம்: புல்மேடு பக்தர்களுக்கு கட்டுப்பாடு!

சபரிமலை: சன்னிதானம் அருகே யானைகள் நடமாட்டம் இருப்பதால், பிற்பகலில் புல்மேடு வழியாக பக்தர்கள் வந்து செல்ல, வனத்துறை தடை விதித்துள்ளது.சபரிமலை சன்னிதானம் அருகே, உரக்குழி என்ற இடத்தில், நேற்று பகல், 12:00 மணிக்கு, ஐந்து யானைகள் வந்தன. தகவலறிந்த வனத்துறையினர், வெடிகளை வெடித்து, காட்டின் உட்பகுதிக்கு யானைகளை விரட்டினர். சீசனில் சன்னிதானம் அருகே யானைகள் வருவது, இதுவே முதல்முறை. பாண்டித்தாவளம் அருகே போடப்பட்டுள்ள, அரவணை மற்றும் அப்பம் தயாரிக்க வாங்கப்படும் சர்க்கரை சாக்குகளின் வாசனையில், யானைகள் வந்திருக்கலாம் என, வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.யானைகள் நடமாட்டத்தால், காலையில் வரும் பக்தர்கள், கூட்டமாக வருமாறும், புல்மேடு வழியாக, பிற்பகலில் பக்தர்கள் வந்து செல்ல வேண்டாம் எனவும், வனத்துறை அறிவித்துள்ளது.பத்தணந்திட்டை - பம்பை ரோட்டில், "லாகா பகுதியின் பல இடங்களில், யானைகள் பற்றிய முன்னறிவிப்பு போர்டுகள் வைக்கப்பட்டுள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !