நாகேஸ்வரன் கோவில் கோபுர சிலை சேதம்: பக்தர்கள் அதிர்ச்சி!
ADDED :4425 days ago
கும்பகோணம்: கும்பகோணம் பகுதியில் பெய்த தொடர் மழை காரணமாக நாகேஸ்வரன் கோவில் ராஜகோபுர யாழி இடிந்து விழுந்தது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சி அடைந்தனர். இக்கோவில் உள்பிரகாரத்தில் நடராஜர் மண்டபம் உள்ளது. கும்பகோணத்தில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையின் காரணமாக நேற்று காலை இந்த மண்டபத்தின் மூலையில் உள்ள கொடுங்கை சுமார் 20 அடி நீளத்திற்கு இடிந்து விழுந்தது. ராஜகோபுரத்தின் உள்பகுதியில் உள்ள சிலைகள் கடந்த சில தினங்களுக்கு முன் 2 இடங்களில் இடிந்துள்ளதும் தற்போது தெரிய வந்துள்ளது. இடிந்து விழுந்ததை அறிந்த பக்தர்கள் வேதனையும் அடைந்துளளனர்.