செல்வ விநாயகர் கோவிலில் திருவிளக்கு பூஜை!
ADDED :4332 days ago
கரூர்: பாரதிநகர் ஸ்ரீ செல்வ விநாயகர் கோவிலில் நடந்த இரண்டாமாண்டு விழா மற்றும் திருவிளக்கு பூஜையில் ஏராளமான பக்தர்கள் பங்கேற்று ஸ்வாமியை வழிபட்டனர். கரூர் உள்ள பிரசித்தி பெற்ற செல்வவிநாயகர் கோவிலில் விநாயகர் பூஜையுடன் திருவிளக்கு பூஜை விழா துவங்கியது. தொடர்ந்து முரளி சிவாச்சாரியார் முன்னிலையில் மூர்த்தி ஹோமங்கள் மஹா பூர்ணாஹூதி நூற்றுக்கணக்கான பெண்கள் பங்கேற்ற திருவிளக்கு பூஜை ஆகிய நிகழ்ச்சிகள் நடந்தது. இதையடுத்து செல்வ விநாயகருக்கு சந்தனகாப்பு அலங்காரம் செய்யப்பட்டு மஹா தீபாராதனை காண்பிக்கப்பட்டது. பிறகு பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. ஏற்பாடுகளை கரூர் பாரதிநகர் பொதுமக்கள் செய்திருந்தனர்.