உள்ளூர் செய்திகள்

/ கோயில்கள் செய்திகள் / குமரி பகவதி அம்மன் கோடி அர்ச்சனை: டிக்கெட் விற்பனை மூலம் ரூ.2.75 கோடி வசூல்!

குமரி பகவதி அம்மன் கோடி அர்ச்சனை: டிக்கெட் விற்பனை மூலம் ரூ.2.75 கோடி வசூல்!

கன்னியாகுமரி: கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலில் கோடி அர்ச்சனை டிக்கெட்டுகள் விற்பனை மூலம் ரூ.2.75 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது. தமிழகத்தில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவில்களில் கன்னியாகுமரி பகவதி அம்மன் கோவிலும் ஒன்று. இந்த கோவிலுக்கு தினமும் ஆயிரக்கணக்கான உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் பக்தர்களும் வந்து அம்மனை தரிசித்துவிட்டு செல்கின்றனர். தற்போது சபரிமலை அய்யப்ப பக்தர்கள் சீசன்காலம் என்பதால் இங்கு வரும் பக்தர்கள் கூட்டம் அலைமோதுகிறது. இங்கு வரும் பக்தர்கள் தங்கள் நலனுக்காக அம்மனுக்கு அர்ச்சனை செய்து வழிபடுவது வழக்கம். இதற்காக இந்த கோவிலில் கடந்த 2009-ம் ஆண்டு நவம்பர் மாதம் 19-ந் தேதி முதல் கோடி அர்ச்சனை திட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது. அந்த திட்டத்தின்கீழ் ஒரு அர்ச்சனைக்கு தலா ரூ.20 செலுத்தி டிக்கெட் பெற்று கோடி அர்ச்சனையில் பங்கேற்று வருகிறார்கள். இந்த திட்டத்தின்கீழ் இதுவரை 14 லட்சம் பக்தர்கள் கோடி அர்ச்சனையில் பங்கேற்று பயன்பெற்று உள்ளனர். இதன்மூலம் மாவட்ட திருக்கோவில் நிர்வாகத்திற்கு ரூ. 2.75 கோடி வருமானம் கிடைத்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !