பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில் ஆருத்ரா உற்சவம் துவக்கம்!
ADDED :4357 days ago
பரமக்குடி: பரமக்குடி ஈஸ்வரன் கோயிலில், டிச. 9ல், மாணிக்கவாசகருக்கு காப்பு கட்டுடன் ஆருத்ரா உற்சவம் துவங்கியது. அதனை தொடர்ந்து 16ம் தேதி வரை மாணிக்கவாசகர் ஆடிவீதி உலாவும், மாலையில் திருவெம்பாவை வாசித்தல், தீபாராதனை நடக்கும். டிச. 17ல் இரவு 7மணிக்கு உற்சவர் நடராஜர் புறப்பாடும், மறுநாள் அதிகாலை 3 மணிக்கு மூலவர் சிவகாமிசுந்தரி சமேத நடராஜருக்கு ஆருத்ரா சிறப்பு அபிஷேகம் நடைபெறவுள்ளது. ஏற்பாடுகளை சுந்தரராஜப் பெருமாள் தேவஸ்தான டிரஸ்டிகள், விழாக்குழுவினர் செய்து வருகின்றனர்.