கோட்டை ஈஸ்வரன் கோவில் 68ம் ஆண்டு மார்கழிப் பெருவிழா
ADDED :4335 days ago
ஈரோடு: ஈரோடு கோட்டை ஈஸ்வரன் கோவிலில், 68ம் ஆண்டு மார்கழிப் பெருவிழா நடந்து வருகிறது. ஈரோடு, கோட்டை திருத்தொண்டீசுவரர் கோவில் என அழைக்கப்படும் கோட்டை ஈஸ்வரன் கோவிலில், 68ம் ஆண்டு மார்கழிப் பெருவிழா, திரும்பாவை விழா கடந்த, 9ம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவெம்பாவை விழாவில், டிசம்பர், 17ம் தேதி வரையிலும் காலை, 5 மணிக்கு, மாணிக்கவாசகர் திருவீதி உலா நடக்கிறது. டிசம்பர், 18ம் தேதி அதிகாலை, 4 மணிக்கு ஆரூத்ரா தரிசனம், ஸ்ரீநடராஜருக்கு சிறப்பு அபிஷேகமும், டிசம்பர், 19ம் தேதி மஞ்சள் நீர் விழா நடக்கிறது. வரும், 14ம் தேதி முதல், 16ம் தேதி வரை மஞ்சள், சிவப்பு, பச்சை மலர்களால் மாணிக்கவாசகர், நடராஜருக்கு சிறப்பு அலங்காரம் நடைபெறும். ஜனவரி, 14ம் தேதி பொங்கல் விழா நடைபெறும், என அறநிலைத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர்.